சினிமா செய்திகள்

விஜய்க்கு ஜோடி ஆவாரா விஜய் தேவரகொண்டாவின் நாயகி!

Published

on

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, இன்கேம் இன்கேம் காவாலே பாடலின் மூலம் தென்னிந்திய முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.

தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ள ராஷ்மிகா பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. பின்னர், அந்த படத்தில் நயன்தாரா புக் செய்யப்பட்டார்.

தற்போது, மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா புக் செய்யப்படுவார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்து இதுவரை வாய் திறக்காத ராஷ்மிகா, அண்மையில், விஜய்யுடன் நடிக்க ஆசை தான், அதுகுறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றது எனக் கூறியுள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version