சினிமா

ரோஜா சீரியலில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன் – அதிர்ச்சி கொடுத்த நடிகர்…

Published

on

சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் சீரியலாக ரோஜா இருக்கிறது. இந்த சீரியல் சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி, வடிவுக்கரசி, காயத்ரி, டாக்டர் ஷர்மிளா, நடராஜ், சிப்பு சூர்யன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

roja
இந்த சீரியலில் அர்ஜூனின் தம்பியாக நடித்து வருபவர் சின்னத்திரை நடிகர் வெங்கட். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்கிற முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரோஜா தொடரிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘என்னுடைய இந்த முடிவு சிலருக்கு சோகத்தை தரலாம். சிலருக்கு மகிழ்ச்சியை தரலாம்.ரோஜா சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதேநேரம் நீங்கள் என்னை ஜீவாவாக பார்க்கலாம். என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய அனைவருக்கும் நன்றி. இதே அன்பையும், ஆதரவையும் எப்போதும் எதிர்பார்க்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

வெங்கட் ரோஜா தொடரில் இருந்து விலகிவிட்டதால் அவருகு பதில் வேறு ஒரு நடிகர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

venkat

 

 

 

Trending

Exit mobile version