சினிமா செய்திகள்

டுவிட்டரில் இணைந்தாரா நடிகர் வடிவேலு?

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு இன்று டுவிட்டரில் இணைந்துள்ளதாக டுவிட்டரில் ஒரு இணையதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் இணைவது மகிழ்ச்சி என்றும் தமிழ் மக்களுக்கு நன்றி என்றும் அதில் வடிவேலு புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பக்கத்திற்கு சுமார் 11 ஆயிரம் ஃபாலோயர்களுக்கு மேல் ஒரு சில நிமிடங்களில் கிடைத்துள்ளனர் என்பதும் அதில் குக் வித் கோமாளி தர்ஷா, இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் உண்மையில் நடிகர் வடிவேலு தான் இந்த பக்கத்தை துவக்கினாரா? இது அவருடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமா என்பது குறித்து தெரியவில்லை. ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே போல் நகைச்சுவை நடிகர்கள் செந்தில் மற்றும் சார்லி பெயரில் டுவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் அந்தப் பக்கங்களை ஃபாலோ செய்யத் தொடங்கினர். ஆனால் நடிகர்கள் செந்தில் மற்றும் சார்லி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து அது தங்களுடைய போலியான டுவிட்டர் பக்கம் என்றும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அதேபோல் வடிவேலுவின் அதிகாரப்பூர்வ பக்கம் தானா இது? அல்லது போலி பக்கமா? என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து வடிவேலுவே விளக்கம் அளித்தால் மட்டும் தான் இது அவருடைய உண்மையான டுவிட்டர் பக்கமா? என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியும். இதுகுறித்து நடிகர் வடிவேலு விளக்கம் அளிப்பரா? அல்லது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version