சினிமா செய்திகள்

’மாரி’ பட நடிகருக்கு கொரோனா: அறிகுறி இல்லாமல் பாதிப்பு என தகவல்!

Published

on

தனுஷ் நடித்த ’மாரி’ படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரபல மலையாள நடிகரும், தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்தவருவமான நடிகர் டொவினோ தாமஸ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் நான் என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். எனக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tovino Thomas Dhanush Maari 2 movie stills

பிரபல மலையாள நடிகரான டொவினோ, லூசிபர் உள்பட பல படங்களில் நடித்து மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அபியும் அனுவும், மாரி உள்பட ஒருசில படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் தற்போது அவர் மலையாள திரையுலகில் பிசியான நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டொவினோ தாமஸ்க்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய ரசிகர்கள் அவர் விரைவில் வேண்டுமென வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version