செய்திகள்

நடிகர் சூர்யாவின் மகள் கிரிக்கெட் விளையாடும் (வீடியோ)

Published

on

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்குப் பின்னர் நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகராக விளங்கு வருகிறார். பல ஹிட் படங்களைக் கொடுத்த அவர் தன்னுடன் நடித்த ஜோதிகாவை காதலித்துப் பின்னர் அவரைக் கடந்த 2006ம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சூர்யா- ஜோதிகா தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். சிறு வயது முதலே பேட்மின்டன் விளையாட்டு மீது மிகுந்து அர்வம் கொண்டவர் தியா. அவருக்கு இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து தான் ரோல் மாடல்.

இவர்களில் ஒருவரான தியா சூர்யா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். டென்னிஸில் கால் பதித்துவிட்ட அவர் தற்போது கிரிக்கெட்டிலும் தனது திறமையைக் காட்ட துவங்கியுள்ளார்.

இதனால் கிரிக்கெட் கிளப்புகளில் சேர்ந்து இப்போதே பயிற்சி பெற ஆரம்பித்து விட்டார். அந்த வீடியோவை தான் தற்போது சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version