சினிமா செய்திகள்

மறைந்த நடிகர் விவேக்கின் கடைசி காமெடி நிகழ்ச்சி: சூர்யா பகிர்ந்த வீடியோ!

Published

on

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமான சம்பவம் திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவை திரை உலக பிரபலங்கள் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை என்பதும் அவரது மறைவு தமிழ் திரை உலக நகைச்சுவைக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது என்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் விவேக் நடித்த கடைசி நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் குக் வித் கோமாளி புகழ் பெண் வேடத்தில் நடித்துள்ளார் என்பதும், விவேக்குடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் விவேக் அவர்கள் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்வார். அவர் மிகவும் மதிக்கத்தக்க ஒரு நடிகர். அவரது கடைசி நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிடுவதில் எனக்கு மிகவும் பெருமை என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version