சினிமா செய்திகள்
‘அருண் விஜயை ராகிங் செய்தேன்… மதிக்கவேயில்லை’- நினைவலைகளைப் பகிரும் சூர்யா
![arun vijay- surya (1) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/arun-vijay-surya-1.jpg)
நடிகர் சூர்யா நடிகர் அருண் விஜய் குறித்து முன்னர் பகிர்ந்த தனது கல்லூரிகால நட்பு குறித்து தற்போது நினைவலைகளை எழுப்பியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பட விழா மேடையில் நடிகர் அருண் விஜய் லயோலா கல்லூரியில் தனக்கு ஜூனியர் என்றும் அருணை ரேகிங் செய்ய முற்பட்டேன் என்றும் நடிகர் சூர்யா பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அருண் விஜயை சிறந்த நடிகர் என அந்த வீடியோவில் சூர்யா புகழ்ந்துள்ளார்.
மேலும் வீடியோவில் சூர்யா குறிப்பிடுகையில், “லயோலாவில் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் சேர்ந்துள்ளதாகக் கூறினார்கள். ரேகிங் செய்யலாம் என சில ஸ்டன்ட் முறைகளை செய்யச் சொன்னேன். ஆனால், எவ்வளவு நேரமாக நிற்க வைத்த போதும் அவன் அதைச் செய்யவே இல்லை. என்னை மதிக்கவே இல்லை. அதன் பின் திரைத்துறையில் சிறந்த நடிகனாக அருண் வளரத் தொடங்கினான். தமிழ் சினிமாவில் நல்ல உடற்கட்டுடன் உள்ள நடிகர்களுள் அருண் விஜய் ஒருவன்” எனப் பேசியுள்ளார்.
சமீபத்தில்தான் நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் அறிமுகமாகும் சினிமாவுக்கான படப் பூஜையை நடத்தினர். இதனது தயாரிப்பாளர் சூர்யாதான்.
????????❤ https://t.co/wlde9JsTmU
— ArunVijay (@arunvijayno1) December 17, 2020