சினிமா

பாலாவின் அடுத்த படத்தில் அவர்தான் ஹீரோவாம்… ரசிகர்களுக்கு டபுள் டீரீட்…

Published

on

தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என அதிரடி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. நான் கடவுள் படத்திற்கு பின் பாலா இயக்கிய திரைப்படங்கள் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. விக்ரமின் மகன் துருவை வைத்து அவர் இயக்கிய ‘வர்மா’ படம் தயாரிப்பாளருக்கு திருப்தியை கொடுக்காமால், வேறு இயக்குனரை வைத்து மீண்டும் அப்படதை எடுக்கும் நிலை ஏற்பட்டது.

5) சூர்யா

இந்நிலையில், தற்போது அவருக்கு உதவ நடிகர் சூர்யா முன்வந்துள்ளார். பாண்டிராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் படங்களை முடித்த பின் அவர் பாலாவின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியாகும் என செய்திகள் கசிந்துள்ளது. அன்றுதான் சூர்யா 40 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளது.

எனவே, சூர்யா ரசிகர்களுக்கு இந்த வருடம் டபுள் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version