சினிமா

ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் பரோட்டா சூரி – இந்த வீடியோ பாருங்க!….

Published

on

தமிழ் சினிமாவில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக நடித்து வந்தவர் நடிகர் சூரி. பரோட்டா காமெடி அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அப்படத்திற்கு பின் கிராமத்து கதை என்றாலே இயக்குனர்களுக்கு சூரி நினைவுக்கு வந்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் சூரியை ரசிகர்களிடம் மேலும் நெருக்கமாக்கியது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தில் சூரி ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

soori

இன்று சூரி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வித்தியாசமான லுக்கில் ஹீரோ போல் போஸ் கொடுத்து சூரியை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சூரியே தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version