தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியில் சேருகிறாரா நடிகர் சிவகுமார்? அவரே அளித்த விளக்கம்!

Published

on

பழம்பெரும் நடிகர் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அவரை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி மற்றும் கோபண்ணா உள்பட பலர் வரவேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த கைராட்டை விழாவில் பங்கேற்ற சிவகுமார் சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டதால் அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த நடிகர் சிவக்குமார் ’அரசியலில் சேர்வதாக இருந்தால் காமராஜர் அண்ணா காலத்தில் சேர்ந்திருப்பேன் என்றும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் மட்டும்தான் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்த காங்கிரஸ் பிரமுகர் ஞானதேசிகன் ஏற்பாடு செய்த கவிஞர் கண்ணதாசன் பிறந்த விழாவிலும் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது இதே போன்று காங்கிரஸ் கட்சியில் அவர் சேரவிருப்பதாக வதந்திகள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சிவகுமாரின் மகன் சூர்யா கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வரும் நிலையில் சிவகுமார், காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version