சினிமா செய்திகள்

செல்பி எடுக்க வந்த இளைஞனின் போனை தட்டி விட்டது ஏன்? நடிகர் சிவகுமார் விளக்கம்

Published

on

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தினைத் திறந்து வைக்க நடிகர் சிவகுமார் திங்கட்கிழமை வந்த போது அவரைக் கான வந்த ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். உடனே அந்த மொபைல் போனை நடிகர் சிவகுமார் கோபமாகத் தட்டி விடப் போன் கீழே விழுந்து செதறியது.

இந்த வீடியோ சமுக வலைத்தளங்களிலும் வைரலானது. மேலும் இது குறித்துப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது விளக்கம் அளித்த நடிகர் சிவகுமார், பாதுகாவலர்களை மீறி வழியை அடைத்துக்கொண்டு செல்பி எடுப்பது நியாயமா? உங்களுடன் ஒரு படம் பிடித்துக்கொள்கிறேன் என்று கேட்டு இருக்கலாமே.

அதனை விட்டு விட்டு இடையூறு செய்ததால் போனை தட்டிவிட்டே. நான் ஒன்று புத்தர் இல்லை. எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதனை வாழ விடுங்கள். செல்பி எடுப்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல், ஊட்டி என்று சுற்றுலா செல்லும் போது அவர்களுடன் எவ்வளவு வேண்டும் என்றாலும் செல்பி எடுத்துக்கொள்ளுங்கள்.

அது பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஒரு பொது இடத்திற்குச் செல்லும் போது கூட்ட நெரிசலான இடங்களில் அதற்கு இடையூறு ஏற்படுமாறு செல்பி எடுப்பது நியாயமா? தங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்க்க மாட்டீர்களா? ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களில் பங்கேற்க சென்ற போது அவர்கள் கோரிக்கையை ஏற்றுப் புகைப்படம் எடுத்துள்ளேன். அது உங்களுக்கும் தெரியும்.

என்னைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், என்னைப் பின்பற்றுங்கள் என்றும் நான் கூறவில்லை. . எல்லோரும் அவர்களது வாழ்க்கையில் ஹோரோக்கள் தான். அதே போல அடுத்தவர்களை எந்தளவுக்குத் துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள் என்றும் நடிகர் சிவகுமார் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version