சினிமா செய்திகள்

’நெல்சன் அண்ணே எப்படி கோர்த்துவிட்டேனா’- தளபதி 65 அப்டேட் கேட்ட சிவகார்த்திகேயன்!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை வம்பிழுக்க அது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை நிறைவு செய்த பின்னர் தளபதி 65 படத்துக்கான வேலையில் இறங்கிவிட்டார். இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட டைட்டிள் வெளியீட்டுக்காக ட்விட்டரில் வாழ்த்துப் போஸ்ட் ஒன்றை பதிவிட்டார் இயக்குநர் நெல்சன்.

அதற்கு பதிலளிக்க வந்த சிவகார்த்திகேயன் கமென்ட்ஸில், “நன்றிண்ணா, டாக்டர் அப்டேட் எதுவும் இல்லையா? விஜய் சார் படம் அப்டேட்? (எப்படி கோர்த்துவிட்டேனா?)” என கேலியாகப் பதிய அதற்கு மீண்டும் ரிப்ளை செய்த இயக்குநர் நெல்சன், “ஹாஹாஹா… அடேய் வாழ்த்துச் சொன்னதுக்கு இப்படியா?” எனப் பதில் அளிக்க இந்தப் பேச்சுவார்த்தை தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version