விளையாட்டு

அஸ்வின் ப்ரோ… வேற மாறி வேற மாறி..!- டிராவிட்டுக்கு சமர்ப்பணம் என சிவகார்த்திகேயனின் உருக்கம்!

Published

on

கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெகுவாகப் பாராட்டி உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்குக் குறைவாக இருந்த போதும் தனது திறமையான பேட்டிங் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார் அஸ்வின்.

இதனாலே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ட்ரா செய்யப்பட்டது. இதையொட்டி ரசிகர்கள் மட்டுமல்லாது பல முக்கிய தமிழ் பிரபலங்களும் தமிழக வீரர் அஸ்வினை பாராட்டி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் அஸ்வின் ரவிச்சந்திரனை பாராட்டும் வகையில், “மன திடம் மற்றும் மன உறுதி. பெரு வணக்கம் இந்திய அணி. எந்நாளும் உயர்ந்த மாபெரும் டிராவிட் அவர்களின் பிறந்தநாளுக்கு  இது மிகப்பெரிய சமர்ப்பணம் அஸ்வின் ப்ரோ. அஸ்வின் ப்ரோ, வேற மாறி வேற மாறி” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version