சினிமா

ரொம்ப நாள் தாடி எடுத்தாச்சு… சிம்பு வெளியிட்ட செம வைரல் வீடியோ…

Published

on

மாநாடு திரைப்படத்தை முடித்துவிட்ட சிம்பு, தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். அதோடு, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சிம்பு அவ்வப்போது சில சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்.

கடந்த வருடம் தான் வீட்டில் சிக்கன் சமைக்கும் வீடியோவை வெளியிட்டார். அதன்பின், தனது தங்கையின் மகனுடன் காரில் செல்லும் வீடியோவை பகிர்ந்தார். இந்த வீடியோக்கள அனைத்தும் வைரலானது.

இந்நிலையில், மீண்டும் ஒரு சமையல் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பல நாட்கள் வைத்திருந்த தாடியை எடுத்து, செம ஸ்டைலாக சிம்பு தோற்றம் அளிக்கிறார்.

இப்போதுதான் முகம் ஃபிரெஸ்ஸாக இருப்பதாக அதை வீடியோ எடுக்கும் தன் நண்பரிடம் அவர் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அவர் வெளியிட்டு 10 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில் சுமார் 7 லட்சத்து 19 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version