சினிமா

நல்லவேளை தப்பித்தேன்!… அறுவை சிகிசைக்கு பின் நடிகர் சித்தார்த் பதிவு…

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். ஷங்கர் இயக்கிய் பாய்ஸ் படம் மூலம் நடிகராக மாறினார். 8 வருடங்களுக்கு பின் ஒரு தெலுங்கு படத்தில் ‘மகா சமுத்திரம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் நடிகர் சர்வானந்த் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. ஆனால், இந்த விழாவில் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை. அவரது உடலில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’: எஸ்பிபி பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தற்போது அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. இன்ஸ்டாகிராமில் இதுபற்றி பதிவிட்டுள்ளர் சித்தார்த் ‘மகா சமுத்திரம் படம் டப்பிங் பணிக்காக ஹைதராபாத்தில் இருக்கிறேன்.உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. சண்டைக்காட்சியில் முதுகில் காயம் ஏற்பட்டுவிட்டது.சில மாதங்கள் ஓய்வு எடுக்கம்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பெரிய நன்றிகள்.எனக்கு வலுவான முதுகெலும்பு இருப்பது மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version