தமிழ்நாடு

போதையில் தலைதெறிக்க கார் ஓட்டிய பிக்பாஸ் சக்தி.. துரத்தி சென்ற பிடித்த மக்கள்!

Published

on

சென்னை: சென்னை சூளைமேட்டில் நடிகர் சக்தி, போதையில் கார் ஓட்டி மக்கள் மீது மோத சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூளைமேட்டில் உள்ள இளங்கோவடிகள் தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சூளைமேட்டில் இன்று மாலை சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து இருக்கிறது. மிகவும் நெரிசலான சாலையில் தாறுமாறாக சென்ற கார் மக்கள் மீது மோதும் வகையில் நெருங்கி சென்றுள்ளது. இதனால் மக்கள் சாலை ஓரம் ஒதுங்கி தப்பித்தனர்.

வேகமாக மக்களை மோதுபடி சென்ற அந்த காரை மக்கள் துரத்தி சென்றனர். பைக்கில் இருந்த சிலர் அந்த காரை துரத்திக் கொண்டு சென்றனர். 20க்கும் அதிகமானோர் அந்த காரை துரத்திக் கொண்டே சென்றனர். கடைசியில் வேகமாக அந்த காரை நெருங்கி அதை நிறுத்தினார்.

காரை திறந்து பார்த்த போதுதான் அது சக்தி என்பது தெரிந்து இருக்கிறது. இதையடுத்து மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அந்த பகுதிக்கு வந்த அண்ணா நகர் போலீசார் அவர், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version