தமிழ்நாடு

ராகுலுக்கு ஒன்றும் தெரியாது, அவர் சின்னப்பிள்ளை: நடிகர் செந்தில்

Published

on

ராகுலுக்கு ஒன்றும் தெரியாது, அவர் சின்னப்பிள்ளை என சமீபத்தில் பாஜகவில் இணைந்த காமெடி நடிகர் செந்தில் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் செந்தில், ‘ராகுல் காந்தி சின்ன பிள்ளை என்றும் அவருக்கு ஒன்றும் தெரியாது என்றும் சோனியா காந்திதான் இந்தியாவையே வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார் என்றும் காமராஜர், கக்கன் போன்றவர்கள் தற்போது காங்கிரஸில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமமுக, அதிமுகவில் எனக்கு மரியாதை இல்லை என்றும் அதனால் நாட்டிற்கு நல்லது செய்யும் மோடி தலைமையிலான பாஜக இணைந்துள்ளேன் என்றும் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் மோடி தான் சிறந்த தலைவர் என்பதால் அவருடைய தலைமையிலான பாஜகவில் இணைந்தேன் என்றும் அவர் கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வர முடிவு செய்திருந்தார் என்றும் ஆனால் டாக்டர்கள்தான் அவரை அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட்டதால் அவர் வேறு வழியின்றி அரசியலுக்கு வரவில்லை என்றும் அரசியலுக்கு வந்தால் அவரால் உண்மையிலேயே அலைய முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், சிறிய கிராமங்களில் கூட தற்போது பாஜக கொடியை பார்க்க முடிகிறது என்றும் செந்தில் தெரிவித்தார். பாஜகவுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன் என்றும் நாட்கள் குறைவாக இருந்தாலும் என்னால் முடிந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன் என்றும் செந்தில் தெரிவித்தார்

Trending

Exit mobile version