தமிழ்நாடு

ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்தேன்; செந்தில்

Published

on

ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்தேன் என காமெடி நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

காமெடி நடிகர் கவுண்டமணியுடன் பல திரைப் படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் செந்தில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக பல வருடங்கள் இருந்தார். ஜெயலலிதாவின் மறைவை அடுத்து தினகரனின் அமமுகவில் இணைந்த செந்தில் இன்று திடீரென அமமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்

சற்றுமுன் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் தலைமையில் பாஜகவில் இணைந்த செந்திலுக்கு, எல். முருகன் பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜகவில் இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த செந்தில், ’ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாஜகவில் இணைந்தேன் என்றும், மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி கிடைக்க வேண்டும் என்றும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பாஜகவுக்காக பிரசாரம் செய்வேன் என்று கூறினார்.

அதிமுக, அமமுகவை அடுத்து பாஜகவில் நடிகர் செந்தில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version