சினிமா செய்திகள்

பல்லு உள்ளவன் பக்கோடா திங்கிறான்: சன்னிலியோனுடன் நெருக்கமாக நடிகர் சதீஷ்!

Published

on

நடிகர் சன்னி லியோனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை நடிகர் சதீஷ் பதிவு செய்துள்ள நிலையில் பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கிறான் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் சதீஷ் தற்போது ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முக்கிய வேடத்தில் சன்னி லியோன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை சன்னிலியோனுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த நடிகர் சதீஷ், அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் பதிவு செய்துள்ளார். அதில் சன்னிலியோன் மிகவும் இனிமையானவர் என்றும் நான் திரையுலகில் இவ்வளவு இனிமையான ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை என்றும் மேலும் அவர் ஒரு நல்ல நடிகை மற்றும் டான்சர் என்றும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் மிகச்சிறந்த மனிதநேயமிக்க நடிகை சன்னி லியோனுடன் இணைந்து பணிபுரிவது தனக்கு மிகவும் பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோன் குறித்த சதீஷின் இந்த பதிவுவுக்கு நெட்டிசன்களின் கமெண்ட்ஸ் தெறிக்க வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version