சினிமா

பிக்பாஸ் வீட்டில் சார்பட்டா பரம்பரை பட நடிகர்…..

Published

on

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் அனேகமாக அக்டோபர் 3ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் லோகோ அறிமுகப்படுத்தும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. மேலும், நேற்று இந்த நிகழ்ச்சியின் முழுமையான புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

kamal

எனவே, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார்? எப்போது தொடங்கும் போன்ற அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக் டாக் புகழ் ஜி.பி. கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

santosh

இந்நிலையில், ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் நடித்த நடிகர் சந்தோஷும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கிட்டதட்ட இது உறுதியான தகவல் எனக் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version