சினிமா செய்திகள்

விக்ரமின் 60வது படத்தில் இணைந்த ரஜினி பட நடிகர்!

Published

on

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஒன்றை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் வாணிபோஜன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர் என்பதும், இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சனந்த் என்ற நடிகர் இணைந்துள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’மெர்க்குரி’, அருள்நிதி நடித்த ’டிமாண்ட்டி காலனி’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’பேட்ட’ படத்தை போலவே இந்த படத்திலும் இவருக்கு முக்கியமான கேரக்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version