தமிழ்நாடு

அமமுகவில் ரஞ்சித்துக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்: விரைவில் வெளியேறுகிறார்!

Published

on

கடந்த மக்களவை தேர்தலின் போது பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்தது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த கூட்டணி பிடிக்காத அக்கட்சியின் துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பின்னர் அமமுகவிலிருந்து தொடர்ந்து பலரும் விலகி மற்ற கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் அமமுகவில் இணைந்த நடிகர் ரஞ்சித்தும் விரைவில் அங்கிருந்து விலகி திமுக அல்லது பாஜகவுக்கு செல்ல உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ரஞ்சித்தின் இந்த உடனடி முடிவுக்கு காரணம் என்ன என்று விசாரித்தபோது அவருக்கு அமமுகவில் உரிய முக்கியத்துவமோ, மரியோதையோ அளிக்கப்படவில்லை என தகவல்கள் வருகின்றன. கடந்த தேர்தலின் போது அமமுகவில் இருந்து யாரும் ரஞ்சித்தை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லையாம். இருந்தாலும் தானாகவே பல மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்கு சென்றுள்ளார். ஆனால் எந்த மாவட்டத்திலும் அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள் ரஞ்சித்தை வரவேற்கவோ, இந்த இடத்தில் பேசுங்கள் என்று திட்டமிட்டுக் கொடுக்கவோ இல்லையாம்.

இவையெல்லாவற்றையும் தாண்டி தனது சொந்த செலவில் ரஞ்சித் தினகரனுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதையெல்லாம் தினகரனிடம் சொல்லியும் அவர் கண்டுகொள்ளவில்லையாம். இது போன்ற காரணங்களுக்காக ரஞ்சித் அமமுகவில் இருந்து விரைவில் விலகலாம் என தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து நடிகர் ரஞ்சித்தை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருவதாகவும், ஆனால் அவர் திமுகவுக்கு செல்வதா, பாஜகவுக்கு செல்வதா என யோசித்துக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version