தமிழ்நாடு

நடிகர் ரஜினிக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவருக்கு வேறு ஏதோ பாதிப்பு என ரசிகர்கள் கணித்து வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி ரஜினிகாந்த் அவர்களுக்கு ரத்தநாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் அவர்கள் ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார் என்பதும், அதன் பிறகு அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு மற்றும் தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்காக டெல்லி சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு ரத்த நாள பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதனை அடுத்து ரத்தநாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ரஜினிக்கு நரம்பியல், இருதயத்துறை மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version