சினிமா செய்திகள்

நடிகர் ரகுமான் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்

Published

on

தமிழ் திரைப்பட நடிகர் ரகுமான் அவர்களின் தாயார் காலமானார் என்ற செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 80 மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ரகுமான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்து வந்தவர் இவர் என்பதும் ஹீரோ மட்டுமின்றி வில்லன், குணசித்திர கேரக்டர்களிலும் இவர் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரகுமானின் தாயார் சாவித்திரி அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. அவருடைய இறுதிச்சடங்கு நாளை காலை கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரகுமானின் தாயார் மறைவு எடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

நடிகர் ரகுமானின் மனைவியும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியும் உடன்பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version