சினிமா

கீழே விழுந்த நடிகர் பிரகாஷ்ராஜ் – விரைவில் அறுவை சிகிச்சை

Published

on

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ, குணச்சிதிர வேடம், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தியவர் பிரகாஷ்ராஜ். தமிழ் மொழியில் மட்டுமில்லாமால் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். ரகுவரனுக்கு பின் வித்தியாசமான வில்லனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரகாஷ்ராஜ்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியான தகவலை பதிவிட்டுள்ளார். கீழே விழுந்து கால் பாதத்தில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய ஹைதராபாத் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ‘என் நண்பர் டாக்டர் குருவரெட்டி அறுவை சிகிச்சை செய்யவுள்ளார். பயப்பட எதுவுமில்லை. என்னை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ எனவும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து விரைவில் நலம் பெற்று திரும்புங்கள் என திரைத்துறையினரும், ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version