சினிமா செய்திகள்

பவர்ஸ்டார் சீனுவாசனுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி!

Published

on

பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

’லத்திகா’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.

பவர்ஸ்டார் சீனிவாசன் தற்போது நடிகை வனிதாவுடன் ’பிக்கப் டிராப்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பவர்ஸ்டார் சீனிவாசன் அவர்களுக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மயக்கமடைந்து அதுவும் உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த ஆடியோ பேட்டியில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version