சினிமா செய்திகள்

மறைந்த நடிகர் பால்வாக்கரின் மகள் நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளையும் ஒரு நடிகர் தான்!

Published

on

மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படமான ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ என்ற படத்தின் 7 பாகங்களில் நடித்தவர் அமெரிக்க நடிகர் பால் வாக்கர் என்பது அறிந்ததே. இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஏழாம் பாகத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே கார் விபத்து ஒன்றில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களில் கார் ரேஸ் குறித்த காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய பால் வாக்கர், அதே கார் விபத்தில் இறந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் பால் வாக்கரின் மகள் மேடே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பால் வாக்கரின் மகள் மேடே என்பவர் நடிகர் லூயிஸ் அலான் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீச்சல் குளத்தில் இருந்து கொண்டே நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை மேடோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் 22 வயதான மேடோ விரைவில் திருமண தேதியை அறிவிக்க இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பால் வாக்கர் மகள் மேடோவை திருமணம் செய்ய இருக்கும் நடிகர் லூயிஸ் அலானும் ஒரு நடிகர் என்பதும், அவர் ஒருசில அமெரிக்க திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version