இந்தியா

விவாகரத்து மரணத்தை விடக் கொடுமையானது: பிரபல நடிகர்

Published

on

காதலித்து திருமணம் செய்த மனைவியை விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என பிரபல நடிகர் ஒருவர் பேட்டி அளித்த போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல டிவி நடிகர் நிதிஷ் பரத்வாஜ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என்று கூறியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாகசைதன்யா – சமந்தா, அமீர்கான் – கிரண் ராவ், இமான் – மோனிகா ஆகிய நட்சத்திரங்கள் விவாகரத்து செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று திடீரென தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிஆர் சோப்ரா தயாரிப்பில் உருவான ’மகாபாரதம்’ என்ற தொடரில் ஸ்ரீகிருஷ்ணர் ஆக நடித்தவர் நிதிஷ் பரத்வாஜ். இவர் விவாகரத்து என்பது மரணத்தை விடக் கூடிய வலியை தரக்கூடியது என்று சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 58 வயதாகும் நிதிஷ் பரத்வாஜ் கடந்த 1991 ஆம் ஆண்டு மோனிஷா என்ற சமையல் கலை நிபுணரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென 2005ஆம் ஆண்டு ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர்.

அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு நிதிஷ் பரத்வாஜ் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் அவர் விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விவாகரத்து என்பது தம்பதியினரின் தவறான முடிவு என்றும் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் சில காலம் தற்காலிகமாக பிரிந்து இருந்தால் பிரிவின் வலி தெரியும் என்றும் எனவே விவாகரத்து செய்வதற்கு முன் பலமுறை யோசித்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version