சினிமா செய்திகள்

’இந்தியன் 2’ படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Published

on

’இந்தியன் 2 உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’இந்தியன்’. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு என்பது தெரிந்ததே. இவர் சற்று முன்னதாக காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்ல போறோம், சிலம்பாட்டம், சர்வம் தாளமயம், ஆகிய திரைப்படங்களில் நடிகர் நெடுமுடி வேணு நடித்துள்ளார் என்பதும் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெடுமுடி வேணு அவர்களின் மறைவிற்கு தமிழ் தெலுங்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும் அவரது மறைவு திரை உலகில் ஈடு இணை ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என்று தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் நெடுமுடி வேணு மூன்று முறை தேசிய விருதுகள் பெற்று உள்ளார் என்பதும் ஆறுமுறை கேரள அரசின் மாநில விருதுகளை வென்றுள்ளார் என்பதும், அதுமட்டுமின்றி பிலிம்பேர் உள்பட பல்வேறு விருதுகளை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version