சினிமா செய்திகள்

ஹீரோவுக்கு தாத்தாவாக நடிக்கும் நடிகர் நெப்போலியன்… மதுரை பின்னணியில் ‘அன்பறிவு’..!

Published

on

முன்னணி ஹீரோ ஒருவருக்கு தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகர் நெப்போலியன்.

மதுரையை பின்னணியாகக் கொண்ட கிராமத்துக் கதையுடன் உருவாகி வரும் படம் ‘அன்பறிவு’. இந்தப் படத்தில் கதாநாயகன் ஆக ஹிப்ஹாப் ஆதி நடிக்கிறார். ஆதி-க்கு தாத்தா கதாபாத்திரத்தில் நடிகர் நெப்போலியன் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹிப்ஹாப் ஆதி-க்கு ஜோடியாக நடிகை காஷ்மிரா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் விதார்த், நெப்போலியன், ஊர்வசி, சங்கீதா கிரிஷ்,  போன்ற முன்னணி நட்சத்திரங்களும் உள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வின் இயக்குகிறார்.

கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்றதொரு குடும்பப்பாங்கான ஜாலியான திரைப்படமாக அன்பறிவு இருக்கும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் முழுவதும் கிராமத்து மதுரைப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. ஆதி மதுரை மொழி நடையிலும் கிராமத்து கதாநாயகனாக இத்திரைப்படத்தில் பார்க்கலாம் என அறிமுக இயக்குநர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version