சினிமா செய்திகள்

நடிகர் நகுல் மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர்: அதிர்ச்சி தகவல்!

Published

on

நடிகர் நகுல் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய மர்மநபர்களால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் காதலில் விழுந்தேன் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் நகுல். இவர் சுருதி என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அகிரா என்ற மகள் உள்ளார் .

இந்த நிலையில் நகுலின் மனைவி சுருதி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்களை அனுப்பி உள்ளனர்.

இது குறித்து ஏற்கனவே அவர் எச்சரிக்கை செய்த நிலையில் தொடர்ச்சியாக ஆபாச வீடியோக்கள் வந்ததை அடுத்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் நகுல் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய மர்மநபர்கள் இன்னும் ஓரிரு நாளில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version