தமிழ்நாடு

எந்த வக்கீலும் ஆஜராகக்கூடாது: கோவை மாணவி விவகாரம் குறித்து பிரபல நடிகர்!

Published

on

கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியருக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜராக கூடாது என பிரபல நடிகர் ஒருவர் ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அந்த மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் ஆசிரியர், பள்ளி முதல்வர் மற்றும் இருவரையும் குறிப்பிட்டு இருந்தார் என்பதும் யாரையும் சும்மா விடக்கூடாது என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அது மட்டுமன்றி பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகர் எம் எஸ் பாஸ்கர் கூறியிருப்பதாவது:

இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை. என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா?

சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்” இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version