சினிமா

மீண்டும் சினிமாவில் நடிக்கும் நடிகர் மோகன்.. புதிய பட அறிவிப்பு

Published

on

80களில் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகர் மோகன். 10 வருடங்கள் இவரின் மார்க்கெட்டை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை.

10 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். வருடத்திற்கு இவரின் நடிப்பில் 10 படங்கள் வெளியாகும். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் 125 நாட்களுக்கும் மேல் சாதனை படைத்தது. இவர் நடிக்கும் படங்கள் இளையராஜா காலத்தில் மறக்க முடியாத பாடல்களை கொடுத்தார்.

பல வருடங்களாக மோகன் சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பின் துவங்கவுள்ளது. இப்படத்தை தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கவுள்ளார்.

இப்படத்தின் தலைப்பு மற்று மற்ற விபரங்கள் ஜனவரி 1ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version