சினிமா செய்திகள்

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்!

Published

on

பிரபல காமெடி, குணச்சித்திர, நாடக, மிமிக்கிரி நடிகரான மயில்சாமி மாரடைப்பால் காலை 3:30 மணியளவில் சென்னையில் காலமானார். இவரது வயது 57.

Laddo Comedy mayilsamy

ஏராளமான படங்களில் நகச்சுவை வேடங்களில் நடித்துள்ள மயில்சாமி, தூள் படத்தில் விவேக்குடன் சேர்ந்து திருப்பதியில் லட்டுக்குப் பதிலாக ஜிலேபி கொடுக்கிறார்கள். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் இவர் குடித்துவிட்டு பெண்ணின் மானத்தைக் காப்பாற்றுகிறேன் என்று செய்த நகைச்சுவை காட்சிகள் காலத்தால் அழியாதவை.

Mayandi kudumbathar comedy

1965-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்த மயில்சாமி, மேடை நாடகங்கள், மிமிக்கிரி ஆர்ரிஸ்ட் என பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் சிறு வேடங்களில் அறிமுகமானார்.

எம்ஜிஆரின் தீவிர பக்தரான மயில்சாமி, யாராவது உதவி என்று சென்று விட்டால் அதனை எப்படியாவது செய்து கொடுக்க வேண்டும் என முயல்வார்.

சிவன் மீது அதிக பற்றுக் கொண்டவர். அடிக்கடி திருவண்ணாமலைக்கும் சென்று வருவதாயும் வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

இப்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த மயில்சாமி மாரடைப்பால் காலமானார்.

மயில்சாமியின் இறப்புக்கு இறங்கல் தெரிவித்துள்ள நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், “எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அன்பு நண்பர் மயில்சாமி அவர்களைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் மனோபாலா, “மயில்சாமி மழை, புயல் வந்த போதெல்லாம் படகு எடுத்துட்டு உதவி பண்ண கிளம்பிடுவாரு. பணம் செலவாகுது சொனா, என்னத்த கொண்டு வந்தோம், என்ன கொண்டு போறோம்னு கேப்பாரு. திரைத்துறையில் நடிகர்கள் தொடர்ந்து இறந்துட்டே இருக்காங்க. வேதனையா இருக்கு” என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version