சினிமா செய்திகள்

நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

திமுக வெற்றி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறு பாடுகளால் வெளியேறிய மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்று பார்ப்போம்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலி கான், மொத்தமாக 350 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்பி வேலுமணி 1,00,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.கலையரசி 6,417 வாக்குகளைப் பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திகேய 63,781 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இதே மன்சூர் அலிகான் சென்ற பாராளுமன்ற தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட போது 28 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version