சினிமா செய்திகள்

சேதம் அடைந்த கால்… 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டு வரும் மம்முட்டி!

Published

on

நடிகர் மம்முட்டி தனது சேதம் அடைந்த காலில் அறுவை சிகிச்சை செய்யாமல் 21 ஆண்டுகளாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ஆகக் கருதப்படுபவர் மம்முட்டி. இவர் சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். மம்முட்டி பேசுகையில், “21 ஆண்டுகளுக்கு முன்னர் எனது இடது காலில் தசை நார் ஒன்று சேதம் அடைந்துவிட்டது.

அப்போது அந்த சேதத்தை சரி செய்ய காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். ஆனால், அதில் ஒரு சிறிய பிரச்னை இருந்தது. அப்படி நான் எனது இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் இடது கால் மட்டும் சிறியதாகிவிடும். வலது கால் நீளமாகவும் இடது கால் குள்ளமாகவும் இருந்தால் சாய்ந்து சாய்ந்தே நடக்க முடியும்.

அப்படி இருந்தால் பலரும் கேலி செய்வார்கள் என நினைத்துக் கொண்டு நான் அப்போது அறுவை சிகிச்சைக்கு மறுப்புத் தெரிவித்துவிட்டேன். அதே பயத்தினால் இதுவரையிலுமே இந்த 21 ஆண்டுகளாக நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவே இல்லை” எனக் குறிப்பிட்டுப் பேசி உள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version