சினிமா செய்திகள்

’தேறி வா சூர்யா…’- ‘தளபதி’ ஸ்டைலில் ரஜினிக்காக மம்முட்டி உருக்கம்!

Published

on

நடிகர் ரஜினிகாந்த் சீக்கிரம் உடல்நலம் தேறி வர வேண்டும் என மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி ‘தளபதி’ திரைப்பட ஸ்டைலில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது உயரிய ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி, நேரம் குறித்து அறிவிக்கப்படவில்லை. ரஜினியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரைக் காண யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் மலையாள திரை உலகின் சூப்பர்ஸ்டார் மம்முட்டி தான் ரஜினி உடன் இணைந்து நடித்த தளபதி பட பாணியில் ரஜினிக்காக உருகியுள்ளார். மம்முட்டி வெளியிட்டுள்ள பதிவில், “சீக்கிரம் தேறி வா சூர்யா… அன்புடன் தேவா” எனக் குறிப்பிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம் இன்றளவும் அதன் புகழை இழக்கவே இல்லை என்றே கூற வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version