கேலரி

30 வயசு குறைஞ்சி போச்சு!…Stunning லுக்கில் தெறிக்க விட்ட மம்முட்டி.. வைரல் புகைப்படங்கள்….

Published

on

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போல மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால் இருக்கிறார்கள். மம்முட்டியை மம்முக்கா என கேரளாவில் அழைக்கிறார்கள். 40 வருடங்களுக்கும் மேல் மலையாள சினிமாவில் நடித்து வரும் அவர், தற்போதும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். ரஜினியுடன் அவர் நடித்த ‘தளபதி’ திரைப்படம் அவரை ரஜினி ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக மாற்றியது.

mammootty

மம்முட்டிக்கு தற்போது 69 வயது ஆகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்து உடலை இளமையாக வைத்திருக்கிறார். மேலும், நீளமான முடி, தாடி என இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். கடந்த வருடம் ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் இருந்த போது அவர் வெளியிட்ட புகைப்படம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதேபோல், சமீபத்தில் அவர் பகிர்ந்த கருப்பு வெள்ளை புகைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலானது.

mammootty

இந்நிலையில், வாலிப வயது நடிகர் போல் ஆடை அணிந்து, நீளமான் தலைமுடி, கூலிங் கிளாஸ் என செம அசத்தலாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து பலரையும் ஆச்சர்ய்யப்படுத்தியுள்ளார்.

mammootty

Trending

Exit mobile version