சினிமா செய்திகள்

பிரபல சூப்பர் ஸ்டாரின் தந்தை மரணம்.. திரை உலகினர் அஞ்சலி!

Published

on

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா திங்கட்கிழமை காலமானார்.

79 வயதான கிருஷ்ண தெலுங்கு, தமிழ் என 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலை குறைவாக இருந்து வந்த நிலையில், திங்கட்கிழமை திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். இந்த செய்தி தெலுங்கு திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழில் 2009-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான கந்தசாமி உள்ளிட்ட சில படங்களில் கிருஷ்ணா நடித்துள்ளார்.

இப்போது நடிகர் கிருஷ்ணா உடலுக்குத் திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Trending

Exit mobile version