சினிமா செய்திகள்

ஒரு முழு பிளைட்டில் ஒரே ஒரு பயணி: அவர் தான் நம்ம தமிழ் நடிகர்!

Published

on

ஒரு முழு பிளைட்டில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணம் செய்ததாகவும் அவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் சமீபத்தில் துபாய்க்கு பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஒன்றுக்காக விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் புக் செய்து இருந்தார். அவர் அன்றைய தேதியில் விமானத்தில் செல்ல விமானத்தில் உள்ளே நுழைந்த போது அந்த விமானத்தில் யாருமே இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சரி இனிமேல் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாதவன் மட்டுமே பயணம் செய்யும் அந்த விமானம் கிளம்பியதை அடுத்து அவர் ஆச்சரியம் அடைந்தார். அந்த விமானத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமே பயணம் செய்கிறீர்கள் என்று விமான அதிகாரிகள் கூறியதை கேட்டதும் அவர் ஆச்சரியம் அடைந்தார்.

இதனையடுத்து அவர் தனது செல்போனில் அந்த விமானம் முழுவதையும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்படி ஒரு அனுபவம் தனக்கு இதற்கு முன்னால் இருந்ததே இல்லை என்றும் நான் ஒருவர் மட்டுமே பயணம் செய்த அந்த விமானத்தில் பயணம் செய்வது தனக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது பயணங்கள் குறைந்து உள்ளது என்பதும் குறிப்பாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் பணியில் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Trending

Exit mobile version