சினிமா செய்திகள்
அடுத்த ரெண்டு வருஷத்துக்கு முழு ’மேடி’ மேஜிக்தான்- நடிகர் மாதவன் சூப்பர் அப்டேட்
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கதாநாயகன் மாதவனை தொடர்ந்து ரசிக்க முடியும் என நடிகர் மாதவனே தனது திரைப்பட அப்டேட்களை அளித்துள்ளார்.
நடிகர் மாதவன் சமீபத்தில் சில படங்களில் தொடர்ச்சியாக கேமியோ கதாபாத்திரங்களாக நடித்திருந்தார். இதையடுத்து கேமியோ கதாபாத்திரங்களுக்கு மட்டும் மாதவனுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததாம். இதை நிறுத்த தனது திரைப் பயணத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அப்டேட்டை மாதவன் வழங்கியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் மாதவன், “மக்களே, அடுத்து எந்தப் படத்திலும் கேமியோ பாத்திரங்கள் செய்யவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முழுக்க முழுக்க மேடி திரைப்படங்கள் மட்டுமே” எனப் பதிவு செய்துள்ளார்.
Hey Folks .. NOT DOING A CAMEO IN ANY FILM AT ALL. ????????????????????. Only thoroughbred Maddy films for the next two years..????????????????????????
— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 21, 2020