சினிமா செய்திகள்

இதெல்லாம் ஒரு படமா?- விமர்சித்த ரசிகரிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் மாதவன்

Published

on

மாறா திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்த ரசிகர் ஒருவரிடம் நடிகர் மாதவன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவான மாறா திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. மலையாளத்தில் வெளியான நடிகர் துல்கர் சல்மானின் சார்லி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆக மாறா திரைப்படம் எடுக்கப்பட்டது. மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் இந்தப் படம் வெளியானது.

ஆனால், சார்லி படத்தைப் பார்த்த யாராலும் மாறா படத்தை பார்க்கவே முடியாது என சமுக வலைதளங்களில் ரசிகர்கள் பல கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்திருந்தனர். இதைப் போலவே ட்விட்டரில் ரசிகர் ஒருவர், “சார்லி படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் சாரசரிக்கும் கீழான ஒரு படமாகத் தான் உள்ளது. 30 நிமிடங்களுக்குப் பின்னர் இந்த மாறா படத்தைப் பார்ப்பதற்கு வலியாகவே உள்ளது. இந்தப் படத்தைக் கெடுத்ததே மாதவன் தான். மிகவும்  வருத்தமான, சோர்வான ஒரு கதாபாத்திரம்” எனக் விமர்சித்து எழுதி இருந்தார்.

இந்த விமர்சன் ட்விட்டர் பதிவைக் கண்ட நடிகர் மாதவன் பதிலுக்கு, “மன்னித்துவிடுங்கள் சகோதரா. நிச்சயமாக அடுத்த முறை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன்” எனப் பதில் அளித்துள்ளார். மாதவனின் பதிலுக்கு பலரும் லைக் கொடுத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version