சினிமா செய்திகள்

சிம்புவின் திருமணத்திற்கு சங்கு ஊதிய #MeToo..!

Published

on

வம்புக்குப் புகழ் பெற்றவர் சிம்பு. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கெட்டவன் என்ற திரைப்படத்தில் லேகா வாஷிங்டன் என்ற நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். ஆனால் படம் சில காரணங்களால் டிராப் ஆனது.

லேகா வாஷிங்டன் கல்யாண சமையல் சாதம், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களாகத் திரை துறையில் உள்ள பெண்கள் பல பிரபலங்கள தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்து வருகின்றனர்.

அதே நேரம் பெண்கள் விஷயத்தில் சிம்பு நல்லவர் என்று டிடி உள்ளிட்ட சிலர் கூறிவந்த நிலையில் லேகா வாஷிங்டன் ‘ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் கெட்டவன் #MeToo’ என்று டிவிட் செய்துள்ளார்.

சிம்புவிற்குத் தற்போது பெண் பார்க்கப்பட்டு வரும் நிலையில் டி ஆர் வீட்டில் இந்த மீ டூ சர்ச்சை பெரிய குண்டை தூக்கிப்போட்டுள்ளது.

சிம்புவிற்கு அதிகப் பெண் நண்பர்கள் உள்ள நிலையில், நயந்தாரா முத்த காட்சியைத் தவிரப் பிற பெண்கள் புகார்களில் பெரிதும் சிக்கியதில்லை. எனவே லேகா வாஷிங்டன்னின் புகார் சிம்பு, மீதா, இயக்குநர் நந்து மீதா அல்லது தயாரிப்பாளர் மீதா என்பதை யார் தெளிவுபடுத்துவார்கள்.

அதே நேரம் பாலியல் தொல்லை குறித்து லேகா வாஷிங்டன் அளிக்கும் 4 வது புகார் இது. மீ டூ சர்ச்சைகளுக்கு முன்பே தனக்கு வந்த பாலியல் தொல்லைகள் குறித்து இவர் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version