சினிமா செய்திகள்

அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் இணைந்த நவரச நாயகன்..!

Published

on

அந்தாதுன் தமிழ் ரீமேக் படக்குழுவில் நடிகர் கார்த்திக் புதிதாக இன்று இணைந்துள்ளார்.

பாலிவுட் அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் ஹிட் அடித்த படம் ஆகும். அதனது தமிழ் ரீமேக்-ல் நடிகர் பிரஷாந்த் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் தோற்றத்தில் நடிக்கிறார். இதேபோல் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில்தான் நடிகை சிம்ரன் ஒப்பந்தம் ஆனார்.

தற்போது நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் ஃபெட்ரிக் இயக்குகிறார். இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்காக இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தை நடிகர் பிரசாந்த்-ன் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்து வழங்குகிறார்.

Trending

Exit mobile version