சினிமா செய்திகள்

உடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுந்து காயம்: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

Published

on

பிரபல நடிகர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் போது கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

கடந்த 80களில் இருந்து பிரபல நடிகராக இருந்தவர் நடிகர் கார்த்திக். இவர் தற்போதும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக், உடற்பயிற்சி செய்யும்போது கீழே தவறி விழுந்ததாகவும் இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் அவரது பி.ஆர்.ஓ தெரிவித்துள்ளார்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நவரச நாயகன் கார்த்திக் உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு காயம் அடைந்துள்ளது. வீட்டில் உடற்பயிற்சி செய்த போது தவறுதலாக கீழே விழுந்ததில் நடிகர் கார்த்திக்கு காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டு உள்ளதால் எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக டாக்டர் சிகிச்சை அளித்தனர். தற்சமயம் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் நடிகர் கார்த்திக் விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவருக்கு சமூகவலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version