சினிமா செய்திகள்

வாழ்வாதாரத்தையே பாதிக்கும் ஒளிப்பதிவு சட்டம் – நடிகர் கார்த்தி முதல்வரை சந்தித்தப் பின் பேட்டி!

Published

on

ஒன்றிய அரசு, ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்கிற புதிய சட்டம் மூலம் திரைத் துறையில் சீர்திருத்தங்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த சட்ட வரைவில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறி தமிழ்த் திரையுலகின் நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் சூர்யா, ‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…’ என்று காட்டமாக இந்தப் புதிய சட்ட வரைவு குறித்து கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்ட வரைவை எதிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:-

வெறுமனே இந்தச் சட்டம் கருத்து சுதந்திரத்தை மட்டும் பாதிப்பதாக இல்லை. அதற்கும் மேல் திரைத் துறையினரின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் ஆபத்து இதில் உள்ளது. இதற்கு முன்னர் வெளி வந்த மற்றும் இனிமேல் வெளி வரப் போகும் திரைப்படங்களை இந்தச் சட்டம் மூலம் ஒன்றிய அரசு முடக்க முடியும். இதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு ஆதரவு தந்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version