சினிமா

பிரபல நடிகர் மரணம்… வடிவேலுவுடன் பல படங்களில் நடித்தவர்….

Published

on

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் காளிதாஸ். டப்பிங் ஆர்டிஸ்ட்டாக வில்லன் நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். வடிவேலுவுடன் பல படங்களில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பெரிய திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். கணீர் குரலுக்கு சொந்தமானவர்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு சினிமா உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தகவலை குணச்சித்திர நடிகர் மோகன் ராம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Trending

Exit mobile version