சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல தமிழ் நடிகர்..!

Published

on

பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கமல் பக்தனாகவே உள்நுழைகிறார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் வீட்டுக்கு விஜயம் அளிக்கிறார். ஜெயம் ரவியின் 25-வது படமான பூமி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதை அடுத்து இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஜெயம் ரவி பிக்பாஸ் வந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்த போது சோஷியல் டிஸ்டன்ஸ் உடன் ஆசி பெற்றார் ஜெயம் ரவி. மேலும் அவர் ஹவுஸ்மேட்சிடம் பேசுகையில், “மிகவும் நேர்த்தியாக விளையாடுறீங்க. வெற்றி கிட்ட வந்திருச்சு. நல்ல தொடர்ந்து சின்சியரா விளாயடுங்க” என்றார்.

அடுத்ததாக பிக்பாஸ் பார்ப்பீர்களா என ஹோஸ்ட் கமல்ஹாசன் ரவியிடம் கேட்க, “கமல் சார் ஓட பக்தன் நான். நீங்க எது செய்தாலும் நான் பார்ப்பேன். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பார்ப்பேன்” எனத் தெரிவித்தார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார் எனத் தெரிகிறது.

Trending

Exit mobile version