சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் அவதாரத்திலிருந்து வில்லன் ஆக உருவெடுக்கும் நடிகர் ஜெய்..!

Published

on

நடிகர் ஜெய் அடுத்ததாக இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் உருவாகும் படம் ஒன்றில் வில்லன் அவதாரம் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய்க்கு தம்பியாக ‘பகவதி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வந்தவர் சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ட்ரிபிள்ஸ் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அடுத்ததாக இயக்குநர் சுசீந்திரனின் ‘சிவ சிவா’ படத்துக்கும் நடிகர் ஜெய் இசை அமைத்து வருகிறார்.

புதிதாக சுந்தர் சி தயாரிக்க உள்ள அடுத்த திரைப்படம் ஒன்றில் ஜெய் வில்லன் ஆக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பெயர் அறிவிக்கப்படாத இத்திரைப்படத்தை சுந்தர் சி தயாரித்து வழங்குவது மட்டுமில்லாமல் அதில் நாயகனாகவும் நடிக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்குகிறார். பத்ரி இதற்கு முன்னதாக ‘நாங்க ரொம்ப பிஸி’ என்ற திரைப்படத்தை  இயக்கியவர் ஆவார்.

seithichurul

Trending

Exit mobile version