சினிமா செய்திகள்

அரசியலுக்கு வருகிறார் நடிகர் ஜாக்கிசான்: எந்த கட்சியில் இணைகிறார் தெரியுமா?

Published

on

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும், ஏன் உலகம் முழுவதிலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் நடிகர்கள் முதலமைச்சராகி உள்ளனர் என்பது தெரிந்ததே.

மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் நடிகர்கள் மாநில அமைச்சர்களாகவும் மத்திய அமைச்சர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல்வேறு நாடுகளில் நடிகர்கள் அரசியலில் இணைந்து பல பதவிகளை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நடிகர்கள் தங்களுடைய திரைப்பட வாய்ப்புகள் குறையும் போதும், வயதான பின்னரும் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், சீன அரசியலில் குதிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சீனாவில் உள்ள மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் பேசியபோது ’சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் கொடுத்த வாக்குறுதிகளை மிகக் குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது என்றும் அதனால் அந்த கட்சியில் உறுப்பினராக இணைய ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவர் விரைவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 67 வயதான ஜாக்கிசான் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version